செவ்வாய்க்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி, ஆளில்லா படகுகள் மூலம் கப்பல் தாக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது. கப்பலில் இருந்த 23 பேரும் இந்திய குடிமக்கள் என்றும், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட தகவலின்படி உயிரிழப்பு எதுவும் இல்லை.
சோச்சி கடற்கரைகள் மூடல்
ரஷ்யாவின் தெற்கு கிராஸ்னோதார் பிராந்தியத்தில் உள்ள சிரியஸ் குடியிருப்பு பகுதியில் கப்பலில் தீப்பற்றியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீயின் தீவிரம் குறைந்ததும் அவசர சேவைகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி கடற்கரைகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டன.
இந்த Aframax Rio tanker attack-க்கு உக்ரைன் படைகள் பொறுப்பா என்பது தெளிவாகவில்லை. தாக்குதல் நடந்த அதே நாளில், ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல நகரங்களைத் தாக்கியதாகவும், உக்ரைன் மாஸ்கோ நோக்கி நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவியதாகவும் தகவல்கள் வெளியாகின. கருங்கடல் பகுதியில் இரு தரப்பும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.




























