சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அமெரிக்க பசிபிக்கட்டளை பெயர் மாற்றம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி தற்போது “அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை” (USINDOPACOM) என அழைக்கப்படும் இராணுவ கட்டளையின் பெயர் மீண்டும் “அமெரிக்க பசிபிக் கட்டளை” (USPACOM) என மாற்றப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கொள்கைகளின் ஒரு பகுதியாக “இந்தோ-பசிபிக்” என்ற பெயர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டு வரலாற்று அடையாளத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டளை அமெரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இராணுவ கட்டளைகளில் ஒன்றாகும். இதன் செயற்பாட்டு பரப்பு அமெரிக்காவின் மேற்குக் கரையிலிருந்து இந்தியாவின் மேற்குப் பகுதி வரையிலும் ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா வரையிலும் விரிவடைந்துள்ளது. பல லட்சம் இராணுவப் பணியாளர்கள் இந்த கட்டளையின் கீழ் செயற்பட்டு வருகின்றனர். இந்த மாற்றம் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையாக விளக்கப்பட்டாலும் இது எதிர்கால பிராந்திய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்