இதற்கான முக்கிய காரணம் சைப்ரஸ் இன்னும் முழுமையாக Schengen பகுதியில் இணைக்கப்படாத ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடாக இருப்பதுதான். எனவே Schengen EES உயிர்முறை (Biometric) எல்லைக் கட்டுப்பாடுகள் சைப்ரஸில் நேரடியாக அமல்படுத்தப்படவில்லை.
இதனால் சைப்ரஸுக்கு நேரடியாக பயணம் செய்யும் பயணிகள் Schengen நாடுகளின் பல விமான நிலையங்களில் காணப்படும் கைரேகை பதிவு முகஅடையாள பதிவு மற்றும் நீண்ட வரிசை போன்ற சிக்கல்களை தற்போது சந்திக்க வேண்டிய நிலை இல்லை. ஆனால் Schengen நாடுகள் வழியாக (Transit) பயணம் செய்பவர்கள் அந்த நாட்டின் நடைமுறைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.
இந்நிலையில் Schengen EES காரணமாக ஐரோப்பாவின் சில முக்கிய விமான நிலையங்களில் இன்னும் நீண்ட காத்திருப்பு நேரங்கள் பதிவாகி வருகின்றன. இருப்பினும் சைப்ரஸ் விமான நிலையம் தற்போதைய நிலைமை பயணிகளுக்கு சாதகமாகவே உள்ளது.


































