தமிழகம் முழுவதும் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. பங்கேற்ற அனைவருக்கும் சிக்கன் பிரியாணி மதிய விருந்தாக வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொருவருக்கும் வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
மகளிர் அணியினருடன் தனுஷ் கலந்துரையாடல்
வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், பெண்களுடன் உரையாடினார். அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், அனைவரும் நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின்போது அவர் ஒரு பாடலும் பாடினார்.
நிகழ்ச்சி முடிவில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த Dhanush women’s wing meeting நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி வளாகம் முழுவதும் வரவேற்பு பதாகைகள் மற்றும் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் என்ற அமைப்பின் பெயர் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என மாற்றப்பட்டு, புதிய லோகோ மற்றும் கொடி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இதற்கிடையே, தனுஷின் அரசியல் ஆர்வம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.































