பார்வையாளர்கள் மீது நம்பிக்கை வைத்துப் படைத்த ‘டோரதி’
சினிமா ரசிகர்களுக்காக பகிர்ந்த நீண்ட கடிதத்தில், ‘டோரதி’ தன்னுடைய பத்தாவது படம் என்றாலும், முதல் படமான ‘பீட்சா’ வெளியான நாளைப் போலவே ஆர்வமும் பதற்றமும் இருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை உருவாக்கிய காலம் தன்னை இயக்குநராகவும், கலைஞராகவும், மனிதராகவும் மாற்றியதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய படங்களில் உண்மைக்கு மிகவும் நெருக்கமானதும், உணர்வுப்பூர்வமானதும் ‘டோரதி’ எனக் குறிப்பிட்ட அவர், 1990-களில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்களிடம் இந்தக் கதையை கொண்டு சேர்க்கும் நம்பிக்கை எதிலிருந்து வந்தது என்ற கேள்விக்கு, பார்வையாளர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே பதில் என அவர் குறிப்பிட்டுள்ளார். ‘டோரதி’யை பார்வையாளர்களிடம் ஒப்படைப்பதாகவும், அதற்கு சிறிது அவகாசம் அளித்தால் அது அவர்களின் மனதைத் தொடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, தம்மம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற Dorothy Tamil film release, தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.






























