சித்துவை நம்பி தொடரப்பட்ட திரைப்படம்
நாட்டார் கதையை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர் படமான இதில், பிக்பாஸ் புகழ் சித்து நாயகனாக நடித்துள்ளார். தர்ஷிகா மற்றும் ரித்விகா ஆகியோர் இரண்டு நாயகிகளாக நடித்துள்ளனர். வேல.ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
படத்தை எழுதி இயக்கியவர் பாலாஜி. இவர் ‘டி3’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர். படம் சுமார் 70 சதவீதம் முடிக்கப்பட்டிருந்தபோது, இதில் நடித்துவந்த நாயக நடிகர் தொடர்ந்து ஒத்துழைக்கவில்லை என விழாவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், பின்னர் சித்துவை நம்பி முழுப் படத்தையும் முடித்து வெளியிட்டதாக கூறப்பட்டது.
ஒன்பது படங்களுக்கு மத்தியில் ‘தி டார்க் ஹெவன்’ வெற்றிகரமாக ஓடுவது பார்வையாளர்கள் அளித்த ஆதரவின் விளைவு என ஜி.தனஞ்ஜெயன் குறிப்பிட்டார். பெரிய நட்சத்திரப் படங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் சூழலில், இப்படத்துக்கு கிடைத்த வெற்றி அபூர்வமானது என்றும் அவர் கூறினார். The Dark Heaven movie success சிறு படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்துகிறது.































