ரயிலில் 12 பெட்டிகளும் 34 சொகுசுத் தொகுப்புகளும் இடம்பெறும். ஒரே நேரத்தில் 72 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த ரயிலில், ஒரு அறைக்கான ஒரு இரவு கட்டணம் சுமார் Dh30,000 முதல் தொடங்கும். தொடக்கப் பயணங்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் சேர, சுமார் Dh2,500 திருப்பித் தரக்கூடிய முன்பணம் செலுத்தலாம்.
சவுதி பாலைவனப் பகுதிகளை இணைக்கும் பயணம்
Dream of the Desert train, ரியாத்தின் வடக்குப் பகுதியில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும். ஜோர்டான் எல்லைக்கு அருகிலுள்ள உள்நாட்டு பகுதிகள் வழியாகச் செல்லும் இந்தப் பாதை, அல்-காசிம், ஹாயில், அல்-ஜவ்ஃப் மற்றும் குரைய்யாத் ஆகிய நான்கு முக்கிய நிறுத்தங்களை இணைக்கும்.
பயணத் திட்டங்கள் குறைந்தது இரண்டு இரவுகளிலிருந்து அதிகபட்சம் ஐந்து இரவுகள் வரை இருக்கும். ஐந்து இரவு திட்டத்தில் அல்-உலாவும் இடம்பெறும். அல்-ஜவ்ஃபில் உள்ள மாரித் கோட்டை, ஹாயிலில் உள்ள அஜா மலைகள் உள்ளிட்ட இடங்களைப் பயணிகள் காணலாம்.
“பிராட்வே பாலைவனத்தைச் சந்திப்பது” போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில், இடைக்கால சவுதி வரலாற்றின் வீரர்கள், புராணங்கள் மற்றும் காதல் கதைகளை அடிப்படையாகக் கொண்ட மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். Dream of the Desert train திட்டம், சவுதி விஷன் 2030ன் கீழ் நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.































