தபூக் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்துக்குச் சென்ற FZ1073 விமானம், புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு அவசரச் signal அனுப்பியது. அதன்பின் சட்டவிரோத தலையீடு இருக்கக்கூடும் எனக் குறிக்கும் மற்றொரு எச்சரிக்கையும், பொதுவான அவசரச் signal-மும் அனுப்பப்பட்டன.
இதனால் கடத்தல் அச்சம் ஏற்பட்டதுடன், இஸ்ரேல் போர் விமானங்களைப் பறக்கவிட்டது. பின்னர் அந்த போயிங் 737 விமானம் ஜோர்டான் வான்வெளியில் இருந்து சவுதியின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது.
பாதுகாப்பு அதிகாரிகளின் தகவலின்படி, விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறே சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம். சில பயணிகள், விமானத்துக்குள் கூச்சல் கேட்டதாகவும், விமானம் திடீரெனக் கீழிறங்கியதாகவும் தெரிவித்தனர். இந்த Dubai to Tel Aviv flight தொடர்பான நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ஃப்ளைடுபாய் நிறுவனம் சம்பவத்தை உறுதிப்படுத்தி, விமானம் தபூக்கில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக தெரிவித்தது. பயணிகளை இஸ்ரேலுக்குத் திருப்பி அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


























