மேற்கு மாகாணத்தில் இயங்கும் FOTON மெட்ரோ பேருந்துகள் மற்றும் பிற வர்த்தக வாகனங்களுக்கு இந்த மையம் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும். திட்டமிட்ட சேவை, தடுப்பு பராமரிப்பு, வாகனக் கண்காணிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் அசல் FOTON உதிரிப்பாகங்கள் இங்கு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேருந்து பராமரிப்பு சேவைகள் விரிவாக்கம்
பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சேவைகள் வழங்கப்பட உள்ளன. வாகனங்கள் நீண்ட நேரம் இயங்காமல் இருப்பது வர்த்தக வாகன உரிமையாளர்களுக்கு வருமான இழப்பையும் அன்றாட பணிகளில் தடங்கலையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்த மையம் முக்கியமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய மெட்ரோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் நிலையில், அவற்றை தொடர்ந்து இயக்குவதற்கு நம்பகமான பராமரிப்பு வசதிகளின் தேவை அதிகரித்துள்ளது. அந்த தேவையை ஆதரிக்கும் வகையில் இந்த FOTON Metro bus service center அமைக்கப்பட்டுள்ளது.
இந்திரா டிரேடர்ஸ் மற்றும் FOTON நிறுவனங்கள் 2007 முதல் கூட்டாண்மையில் செயல்பட்டு வருகின்றன. 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திரா டிரேடர்ஸ், கிளைகள் மற்றும் சேவை மையங்களின் வலையமைப்பின் மூலம் வாகன விற்பனை, வர்த்தக வாகனங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குகிறது.






























