பிரான்ஸ் வானிலை, பிரான்சில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்ப அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வியாழக்கிழமை (ஜூலை 16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை திடீரென மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கனமழை மின்னல் ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக அதிக வெப்பநிலையை அனுபவித்த பகுதிகளில் இந்த இடியுடன் கூடிய மழை வெப்பத்தை குறைக்க உதவினாலும் திடீர் வெள்ளப்பெருக்கு மரங்கள் முறிவு மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் பெரிய மரங்களின் கீழ் நிற்காமல் இருக்கவும் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸ் வானிலை













Leave a Reply