அதேவேளை முழு கோடை காலமும் தொடர்ந்து வெப்பமாக இருக்கும் என உறுதியாக கூற முடியாது என்றும் சில நாட்களில் வழக்கத்தை விட குளிர்ச்சியான காலநிலையும் ஏற்படக்கூடும் என்றும் Météo-France விளக்கியுள்ளது. மழைப்பொழிவு தொடர்பில் தெளிவான முன்னறிவிப்பு வழங்க இயலாத நிலை இருப்பதாகவும் பிரான்ஸ் முழுவதும் எந்த ஒரு குறிப்பிட்ட மழைச் சூழலும் தற்போது முன்னுரிமை பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வசந்தகாலம் 1900 ஆம் ஆண்டு முதல் பதிவான காலநிலை வரலாற்றில் மிகவும் வெப்பமான வசந்தமாக இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து வரும் கோடை காலமும் சாதாரணத்தை விட சூடாக இருக்கக்கூடும் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.































