காற்றின் வேகம் 90 கி.மீ. வரை அதிகரிக்கலாம்
ஆஸ்டின் புயலைத் தொடர்ந்து, வடக்கு ஐரோப்பா வழியாக நகரும் போயலோ எனப் பெயரிடப்பட்ட புதிய வானிலைத் தாழ்வு பகுதி பிரான்ஸை பாதிக்கிறது. தென்மேற்குக் காற்று பொதுவாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
பிரிட்டானி முதல் ஓ-து-பிரான்ஸ் வரையிலான பகுதிகளில், குறிப்பாக ஆங்கிலக் கால்வாய் அருகே, காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம். பிற உள்நாட்டுப் பகுதிகளில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலில் ஆங்கிலக் கால்வாய் கரையோரத்திலும் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.
France yellow wind alert பட்டியலில் ஐன், அல்லியே, ஆர்டென்னஸ், ஓப், பாஸ்-ரின், கல்வடோஸ், ஷேர், கோத்-தோர், கோத்-த’ஆர்மோர், டூ, யூர், யூர்-எ-லுவார், எசோன், ஃபினிஸ்தேர், ஓட்-மார்ன், ஓட்-சோன், ஓ-ரின், ஓ-து-சேன், இல்எ-எ-விலேன், இந்திர், இந்திர்-எ-லுவார், ஜூரா, லுவார்-எ-ஷேர், லுவார்-அத்திலாந்திக், லுவாரே, மைன்-எ-லுவார், மாஞ்ச், மார்ன், மாயென், மேத்த்-எ-மொசெல், மேஸ், மோர்பிஹான், மோசெல், நியேவ்ர், நோர், ஓய்ஸ், ஓர்ன், பாரிஸ், பா-து-கலே, புய்-து-தோம், சார்த், சோன்-எ-லுவார், சேன்-எ-மார்ன், சேன்-மரிட்டிம், சேன்-சான்-தனி, சோம், பெல்ஃபோர் பிராந்தியம், வால்-து-மார்ன், வால்-த’ஓய்ஸ், வெந்தே, வியென், வோஜ், யோன், யுவலின் மற்றும் தே-செவ்ர் ஆகியவை அடங்கும்.
காற்று ஆபத்தான நிலையை எட்டும் போது தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், காற்றில் அடித்துச் செல்லக்கூடிய பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
































