சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், சென்னை தொழிலதிபர் ஜெம் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி 29.08.2026 அன்று கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாகக் கூறப்படும் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனும் கைது செய்யப்பட்டனர். மூவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வீரமணியிடம் சிறை வளாகத்திலேயே விசாரணை
84 வயதான வீரமணியை வெளியே அழைத்து வந்து விசாரிப்பதில் சிக்கல்கள் இருந்ததால், சிறப்பு அனுமதியுடன் புழல் சிறையிலேயே போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வீரமணியின் நெருங்கிய உதவியாளராக செயல்பட்டதாகக் கூறப்படும் கணேசன், அந்த வீடியோ குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீரமணி நடத்தி வந்த ஜெம் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றியவர் என்றும், தற்போது வேறு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
Ganesan arrested in Chennai POCSO case தொடர்பாக, அவரை காவல் custody-யில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர். சிறுமியின் வீடியோவை கணேசனுக்கு அனுப்பியது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என போலீஸார் கூறியுள்ளனர்.































