முன்னதாக நிதிச் செலவுகளை குறைக்கும் நோக்கில் பலருக்கான இலவச Integration Course சேர்க்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிரந்தரமாக ஜெர்மனியில் தங்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து கட்டணமின்றி இந்தப் பாடநெறியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
Integration Course பொதுவாக சுமார் 600 மணி நேர ஜெர்மன் மொழிப் பயிற்சியையும், 100 மணி நேர ஜெர்மன் சட்டம், சமூக வாழ்க்கை, வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான Orientation Course-ஐயும் உள்ளடக்கியதாகும். இது வேலைவாய்ப்பு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால குடியிருப்பு நடைமுறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதேவேளை, அனைத்து குடியேறிகளும் தானாகவே இந்த இலவச வசதியைப் பெற முடியாது. குறிப்பாக நிரந்தர குடியிருப்புக்கான வாய்ப்பு குறைவாகக் கருதப்படும் சில புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் தற்காலிக தங்குமதி கொண்டவர்களுக்கு முந்தையபோல் பொதுவான இலவச அனுமதி வழங்கப்படாது. அவர்களின் விண்ணப்பங்கள் தனிப்பட்ட அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






























