கோவை ரெட் பில்ட்ஸ் பகுதியில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியில் நடைபெற்ற மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்க அவர் கடந்த ஒரு வாரமாக அங்கு தங்கியிருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரியிடம் இந்திய கடற்படை தொடர்பான பாதுகாப்புத் தகவல்களை அவர் பகிர்ந்ததாக ஆந்திரப் பிரதேச காவல்துறையின் கவுண்டர் இன்டெலிஜென்ஸ் சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் தொடர்பான தகவல்கள்
சமூக ஊடகங்கள் மூலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்கள் பகிரப்பட்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநில சி.ஐ. சிறப்பு பிரிவு போலீசார் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்.
பின்னர் ஆந்திராவில் இருந்து கோவை வந்த சிறப்பு குழுவினர், ஐ.என்.எஸ். அக்ரானியில் பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். Indian Navy sailor arrested நடவடிக்கைக்குப் பிறகு, அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.






























