‘சிக்மா’ படத்தில் வின்சென்ட் கதாபாத்திரம்
தனது நடிப்புப் பயணம் ஒன்பது வயதில் நாடகம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் தொடங்கியதாக ஷிவ் பண்டிட் தெரிவித்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம், குரல் ஏற்ற இறக்கங்களைப் புரிந்துகொள்ள உதவியதாகவும் கூறினார்.
பிஜாய் நம்பியார் இயக்கிய ‘சைத்தான்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், அந்தப் படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருதுப் பரிந்துரையைப் பெற்றதாக தெரிவித்தார். தனது முதல் தமிழ் படமான ‘லீலை’ வெளியாகி பல ஆண்டுகள் கடந்தாலும், அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக தொடர்ந்து ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
சமூக வலைதளங்களில் ‘லீலை’ குறித்து வெளியான பதிவுகளை கவனித்த ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ படத்தில் வின்சென்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தன்னைத் தேர்வு செய்ததாக ஷிவ் பண்டிட் கூறினார். சூதாட்டக் கிளப்பை நடத்தும் அந்தக் கதாபாத்திரத்தில் விருப்பத்துடன் நடித்ததாகவும், இயக்குநர் ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்ட படக்குழுவுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். Shiv Pandit in Sigma அனுபவத்தில், இயக்குநர் தமக்கு குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.




























