சஞ்சய் மற்றும் படக்குழுவுக்கு சூர்யா, கார்த்தி வாழ்த்து
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இப்படம் நாளை, அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.
சூர்யா வெளியிட்ட பதிவில், சிறுவனாக இருந்த சஞ்சய் தற்போது இயக்குநராக மாறியிருப்பதை நம்ப முடியவில்லை என்றும், இது முக்கியமான நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன், லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கார்த்தி தனது பதிவில், சஞ்சய் சினிமாவைத் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். அவருக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் மக்களின் அன்பு கிடைக்க வேண்டும் என்றும், இந்தத் திரைப் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். Jason Sanjay Sigma film வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.






























