சட்டக் கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு
இந்த நிகழ்வில் மூத்த கல்வியாளர்கள், சட்டத்துறை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். Paul Ratnayeke Associates தயாரித்த அறக்கட்டளை பத்திரத்தில், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நிறுவுநராக கையெழுத்திட்டார்.
கொழும்புப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மகேஷ் இந்திக கருணாதிலக, சட்ட பீட பீடாதிபதி பேராசிரியர் சம்பத் புஞ்சிஹேவா, இலங்கை சட்டக் கல்லூரி அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பிரசாந்த லால் டி அல்விஸ், பேராசிரியர் பீரிஸின் மகள் டாக்டர் அமந்தி பண்டுசேன ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.
பேராசிரியர் பீரிஸ் இலங்கைச் சட்டங்கள் மற்றும் சட்ட அமைப்புகள் குறித்து எழுதிய 10 நூல்களுக்கான ராயல்டி வருவாய் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். மேலும், அவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 மில்லியனை அறக்கட்டளை நிதியாக வழங்கியுள்ளார்.
Professor G.L. Peiris Trust மூலம் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடம் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியின் தேவைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கப்படும். சட்ட ஆய்வுகள், சமகாலப் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள், நினைவு விரிவுரைகள், வழக்குரைப் போட்டிகள் மற்றும் விவாதப் போட்டிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
பேராசிரியர் பீரிஸின் சட்டக் கல்விப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், குற்றவியல் சட்டத்திற்கான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தங்கப் பதக்கத்தை நிறுவ சட்ட பீடம் முடிவு செய்துள்ளதாக பேராசிரியர் சம்பத் புஞ்சிஹேவா அறிவித்தார்.































