இந்திய கடற்படை கப்பல்கள் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி
இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் வருகையின் ஒரு பகுதியாக இந்த கூட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவலின்படி, இரு நாடுகளின் கடற்படை இசைக்கலைஞர்கள் இணைந்து இசை வழங்க உள்ளனர்.
இந்திய கடற்படையின் First Training Squadron (1TS) படைப்பிரிவில் INS Tir, INS Sujata ஆகிய கப்பல்களும், இந்திய கடலோரக் காவல்படைக் கப்பலான Indian Coast Guard Ship (ICGS) Sarathi-யும் இடம்பெற்றுள்ளன. இக்கப்பல்கள் கொழும்புக்கு வருகை தரும் பின்னணியில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Indian Sri Lankan Navy bands வழங்கும் இந்த இசை நிகழ்ச்சி, இரு நாடுகளின் கடற்படை இசை மரபுகளை பொதுமக்கள் நேரில் காணும் வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை மற்றும் நல்லுறவை மையமாகக் கொண்ட மாலை நிகழ்வாக இது அமையும்.































