இத்தாலி அரசு 2026 முதல் 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கான புதிய குடியேற்ற (Immigration) திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள (Non-EU) நாடுகளிலிருந்து மொத்தம் 4,97,550 தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி குடியேற்ற திட்டம் 2026 படி, 2026 ஆம் ஆண்டில் மட்டும் 1,64,850 வேலை அனுமதிகள் வழங்கப்படவுள்ளன. அதன் பின்னர் 2027 மற்றும் 2028 ஆண்டுகளிலும் இதே அளவில் படிப்படியாக அதிகரித்து அனுமதிகள் வழங்கப்படும்.
இந்த மொத்த எண்ணிக்கையில், சுமார் 2,67,000 வேலை வாய்ப்புகள் விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளில் seasonal (காலாண்டு) வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2,30,550 வேலை வாய்ப்புகள் நிரந்தர வேலை மற்றும் சுயதொழில் (non-seasonal & self-employment) பிரிவுகளுக்காக வழங்கப்படும்.
புதிய திட்டம் இத்தாலியின் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும், வேலைவாய்ப்பு தேவைகளை அடிப்படையாக கொண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை சட்டபூர்வமாக கொண்டு வரவும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுமானம், வேளாண்மை, ஹோட்டல், லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் அதிகமான தேவை உள்ளதால் இந்த திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் முந்தைய “click-day” முறையை மாற்றி நிறுவனங்கள் வருடம் முழுவதும் விண்ணப்பிக்கக்கூடிய புதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வேலை வழங்குநர்களுக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் எளிதான செயல்முறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


























