தனேஷின் வீட்டுக்கு அருகில் வசித்த 17 வயது மாணவி, நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் சில மாதங்களாக நெருங்கிப் பழகிய நிலையில், மாணவி கர்ப்பமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் பெற்றோருக்குத் தெரியவந்தபோது, கர்ப்பத்தைக் கலைப்பது குறித்து தனேஷ் மற்றும் அவரது மனைவி அனிதா ரோஸுடன் ஆலோசித்ததாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.
நாகர்கோவில் மருத்துவமனையில் கருக்கலைப்பு
தனேஷும் அனிதா ரோஸும் மாணவியை நாகர்கோவில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு கருக்கலைப்பு நடைபெற்றது தொடர்பாக மாணவி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், மருத்துவர் கிஷோர் (61), அவரது மகள் மருத்துவர் சரண்யா (32), செவிலியர் ரேணுகா (56) ஆகியோரை கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனையின்போது உடல்நிலை பாதிப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்ததால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Kanyakumari POCSO case-ல் தனேஷ் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் அனிதா ரோஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை போலீஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



























