Ministry of Interior (குவைத் உள்துறை அமைச்சகம்) வெளியிட்ட அறிவிப்பின்படி, காலாவதியானது அல்லது விரைவில் காலாவதியாக உள்ள அனைத்து விஜிட் விசாக்களும் தானாகவே 1 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.

இந்த நீட்டிப்பு 2026 பிப்ரவரி 28 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த செயல்முறை முழுமையாக மின்னணு முறையில் நடைபெறுவதால், விசா வைத்திருப்பவர்கள் குடிவரவு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்த காலப்பகுதிக்கான அனைத்து அபராதங்களும் மற்றும் கட்டணங்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது குவைத் நாட்டிற்கு வெளியே உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி வெளிநாட்டில் தங்கியிருந்தாலும், அவர்களுக்கு 3 மாதங்கள் வரை தானியங்கி அனுமதி (absence permit) வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், நிலைமையைப் பொறுத்து இந்த காலவரம்பு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading