பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக சமூக வலைதளப் பதிவு ஒன்று பரவியது. இந்தச் சம்பவம் தொடர்பாக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை
போலீசாரின் தகவலின்படி, கடந்த 24ஆம் தேதி லவ்லி பல்கலைக்கழகத்தின் ஜி3 விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவத்துக்குப் பிறகு அவர் தனது வீட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். Lovely Professional University protest தொடர்பான போராட்டம் நேற்று இரவு வன்முறையாக மாறிய நிலையில், சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பல்கலைக்கழகத்தை 10 நாட்களுக்கு மூட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மிட் டேர்ம் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.






























