மும்பையின் தேவ்னார் பகுதியில் போலீஸார் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவண்டி பகுதியில் ரோந்து வாகனம் சென்றபோது, 15 வயது சிறுவனின் நடவடிக்கை சந்தேகத்துக்கிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. கான்ஸ்டபிள் அசோக் அவனை பிடித்து விசாரிக்க முயன்றபோது, பிளாஸ்டிக் பையுடன் சிறுவன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றான்.
சிறுவனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகள்
போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, பையில் போதைக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், போதைக்காக மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு அவற்றை விற்று வந்ததாக சிறுவன் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
அருகிலுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் பானோ காலா என்ற பெண், மாத்திரைகளை விற்பனைக்காக தன்னிடம் கொடுத்து, அதற்காக ரூ.200 சம்பளம் வழங்கியதாகவும் சிறுவன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வைத்திருந்த சிறுவன் சிறுவர் சீர்திருத்த முகாமுக்கு அனுப்பப்பட்டார். பள்ளிக்கு செல்ல வேண்டிய சிறுவனை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த Mumbai minor drug trafficking case, சிறுவர்களை போதைப்பொருள் விற்பனையில் பயன்படுத்துவது குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.






























