நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கையையும் தனது அரசு அனுமதிக்காது என்றும் தேவையானால் மீண்டும் தாக்குதல் நடத்த தயார் என்றும் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திறன்களை இஸ்ரேல் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடியாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் எச்சரித்திருந்தனர். இந்த பரஸ்பர எச்சரிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மிகவும் நெருக்கடியானதாக இருப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இரு தரப்பினரின் அறிக்கைகளும் அப்பகுதியில் புதிய இராணுவ மோதலுக்கான அச்சத்தை அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.































