பாரிஸ் காவல் துறை உத்தரவின்படி, சில மெட்ரோ நிலையங்கள் வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை முதல் மூடப்படும். சில நிலையங்கள் சனிக்கிழமை முழுவதும் பயணிகளுக்கு சேவை வழங்காது. பேருந்து வழித்தடங்களிலும் மாற்றம் அல்லது தற்காலிக நிறுத்தம் ஏற்படும்.
மூடப்படும் முக்கிய மெட்ரோ நிலையங்கள்
மெட்ரோ 1 வழித்தடத்தில் Tuileries, Concorde, Champs-Élysées – Clemenceau, Franklin D. Roosevelt, George V, Charles de Gaulle – Étoile மற்றும் Argentine ஆகிய நிலையங்கள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை முழுவதும் மூடப்படும். மெட்ரோ 2-ல் Charles de Gaulle – Étoile நிலையமும் இதே நேரத்தில் மூடப்படும்.
மெட்ரோ 4-ல் Cité, Odéon, Vavin ஆகிய நிலையங்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மூடப்படும். மெட்ரோ 6-ல் Trocadéro முதல் Charles de Gaulle – Étoile வரையிலான சேவை வெள்ளிக்கிழமை நிறுத்தப்படும். மெட்ரோ 8-ல் École Militaire நிலையம் பிற்பகல் 1 மணி முதல் மூடப்படும்.
மெட்ரோ 9-ல் Iéna, Alma – Marceau, Franklin D. Roosevelt மற்றும் Saint-Philippe-du-Roule, மெட்ரோ 10-ல் Duroc, Odéon, Cluny, Ségur, மெட்ரோ 12-ல் Concorde, மெட்ரோ 13-ல் Duroc, Saint-François-Xavier, Champs-Élysées – Clemenceau ஆகிய நிலையங்களும் கட்டுப்பாடுகளுக்கு உட்படும். Paris metro closures தொடர்பான அறிவிப்புகளைப் பயணிகள் முன்கூட்டியே சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் பக்தர்களின் போக்குவரத்துக்காக ரயில்கள், RER சேவைகள் மற்றும் மெட்ரோவில் மொத்த போக்குவரத்து வழங்கல் சுமார் 10% அதிகரிக்கப்படும். RER B, C, D, H, J, L மற்றும் U வழித்தடங்களில் கூடுதல் சேவைகள் இயக்கப்படும். பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக 1,300 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.































