Paris Gare du Nord பகுதியில் ஏற்பட்ட மின்சார விநியோகக் கோளாறின் தாக்கமாக Orry-la-Ville–Coye மற்றும் Gare du Nord இடையிலான ரயில் சேவைகள் தற்போது தடங்கலுடன் இயங்குகின்றன.
இதனால் பயண நேரம் அதிகரிக்கலாம் என்றும் சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Gare du Nord மற்றும் Gare de Lyon இடையிலான RER D ரயில் சேவை ஆகஸ்ட் 16ஆம் திகதி வரை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கோடைக்கால பெரிய அளவிலான ரயில் பாதை பராமரிப்புப் பணிகளே இதற்குக் காரணமாகும்.
இந்தக் காலப்பகுதியில் Stade de France–Saint-Denis நிலையத்திலும் RER D ரயில்கள் நிறுத்தப்படாது. பயணிகள் மாற்று RER மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 31ஆம் திகதி வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேரங்களில் பின்வரும் பகுதிகளில் சேவைகள் நிறுத்தப்படுகின்றன, Gare de Lyon – Corbeil-Essonnes – Melun பகுதிகளில் இரவு 11.15 மணிக்குப் பின்னர் ரயில்கள் இயங்காது.
Corbeil-Essonnes – Melun பகுதியில் இரவு 11.15 மணிக்குப் பின்னர் சேவை நிறுத்தப்படும். Creil – Gare du Nord பகுதியில் இரவு 11.35 மணிக்குப் பின்னர் ரயில்கள் இயங்காது.
Corbeil-Essonnes – Malesherbes பகுதியில் இரவு 11 மணிக்குப் பின்னர் சேவை நிறுத்தப்படும். இந்தப் பகுதிகளில் மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக RATP தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்திலும் இரவு நேரப் பணிகள் தொடரவுள்ளன. ஆகஸ்ட் 3 முதல் 28 வரை வார நாட்களில் Corbeil-Essonnes மற்றும் Malesherbes இடையிலான சேவை இரவு 11 மணிக்குப் பின்னர் நிறுத்தப்படும். ஆகஸ்ட் 3 முதல் 21 வரை Gare de Lyon, Melun மற்றும் Corbeil-Essonnes பகுதிகளுக்கு இடையிலான சேவை இரவு 11.15 மணிக்குப் பின்னர் இயங்காது.
Creil மற்றும் Gare du Nord இடையிலான சேவையும் ஆகஸ்ட் 3 முதல் 28 வரை இரவு 11.35 மணிக்குப் பின்னர் நிறுத்தப்படும். மேலும், ஆகஸ்ட் 22ஆம் திகதி Gare de Lyon மற்றும் Melun இடையிலான ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்படவுள்ளது. அன்று இரவு 10 மணி முதல் Châtelet–Les Halles மற்றும் Villeneuve-Saint-Georges இடையிலான சேவையும் நிறுத்தப்படும்.
மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. RER D வழியாகப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளவர்கள் புறப்படுவதற்கு முன்பு RATP அல்லது Île-de-France Mobilités செயலியில் நேரடி போக்குவரத்து நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





























