திருமணம் முடிந்து சென்னைக்குத் திரும்பியபோது விபத்து
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்கின் தம்பி ரஜினிகுமாரின் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் வேலை பார்த்து வந்த ஏழு பேர் காரில் ராமநாதபுரம் சென்றனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பிரபாகரன், காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கார்த்திக் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், சூர்யா திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
கண்ணதாசன், ஜான் கென்னடி, சரண்யா ஆகிய மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Perambalur car bus accident தொடர்பாக பெரம்பலூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்து ஓட்டுநர், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த ராஜசீலன், கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.































