சீனாவுக்குச் சொந்தமான Premier Coal நிறுவனம், மாநில அரசுக்குச் சொந்தமான Muja மற்றும் Collie மின் நிலையங்களுக்கு முக்கிய நிலக்கரி வழங்குநராக உள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய அரசு, Perth நகரத்திலிருந்து 200 கிலோமீட்டர் தெற்கில் உள்ள இந்த இரு மின் நிலையங்களையும் 2030ஆம் ஆண்டுக்குள் மூடத் திட்டமிட்டுள்ளது.
பணிப்பட்டியல் மாற்றத்தால் ஊதியம் குறையும் அபாயம்
Mining and Energy Union கூறுகையில், முன்மொழியப்பட்ட சில பணிப்பட்டியல் மாற்றங்களால் தொழிலாளர்கள் ஆண்டுக்கு சுமார் 30,000 ஆஸ்திரேலிய டொலர் வரையிலான கூடுதல் ஊதியத்தை இழக்கக்கூடும். தற்போது அவர்கள் 12 மணி நேரப் பணியை, நான்கு நாட்கள் பகல் பணி, நான்கு நாட்கள் ஓய்வு, நான்கு இரவுப் பணி, நான்கு நாட்கள் ஓய்வு என்ற முறையில் செய்கின்றனர்.
Premier Coal நிறுவனம் நான்கு ஆண்டுகளில் 12 சதவீத ஊதிய உயர்வை முன்வைத்துள்ளது. ஆனால், உயர்வு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கம் கோருகிறது. நிறுவனத்தின் பேச்சாளர்கள், நியாயமான மற்றும் நீடித்த உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நல்ல நம்பிக்கையுடன் தொடர்வதாக தெரிவித்தனர்.
Premier Coal strike போராட்டத்தில் Collie நகர மக்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் Greg Busson, சுரங்கப் பணிகள் குறையும் நிலையில் நகரில் மாற்று வேலைவாய்ப்புகள் கிடைப்பது குறித்த அச்சம் இருப்பதாக கூறினார்.
Collie-யின் மாற்றத்திற்காக மாநில அரசு 700 மில்லியன் ஆஸ்திரேலிய டொலருக்கு மேல் ஒதுக்கியுள்ளது. இதில் Premier Coal பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக 3.2 மில்லியன் டொலர், மேலும் Synergy நிறுவனத்தின் பெரிய மின்கலன் திட்ட கட்டுமானத்தில் 500 வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.






























