ஈரானிய புரட்சிகரக் காவல்படையின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி, ஹோர்முஸ் நீரிணையின் கீழ் ஏழு முக்கிய தொடர்புக் கேபிள்கள் செல்கின்றன எனத் தெரிவித்துள்ளார். உலகளாவிய இணையம் மற்றும் வணிகத் தரவு பரிமாற்றத்தின் பெரும் பகுதி இத்தகைய கடலடி கேபிள்களை நம்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செங்கடல் வழித்தடத்தில் அதிகரிக்கும் அபாயம்
அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், மத்திய கிழக்கிலுள்ள தரவு மையங்கள், தொடர்புக் கேபிள்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையங்களும் தாக்கப்படலாம் என ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணை வழியாக ஐரோப்பா–ஆசியா தரவு பரிமாற்றத்தின் பெரும் பகுதி நடைபெறுகிறது.
பாப் அல்-மந்தப் நீரிணை சுமார் 26 கிலோமீட்டர் அகலமுடையது. உலக இணையப் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கு அருகிலான அளவு இந்தப் பகுதியில் செல்லும் எனக் கூறப்படுகிறது. மோதல் நிலவும் பகுதியில் கேபிள்கள் சேதமடைந்தால், பாதுகாப்பு காரணங்களால் அவற்றைச் சீரமைப்பது கடினமாகும்.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட இடங்களில் உள்ள தொழில்நுட்பக் கட்டமைப்புகள் ஏற்கனவே தாக்குதல்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, Red Sea undersea cables பாதிக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்க, ஈராக் வழியாக துருக்கி மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மாற்று நிலத்தடி கேபிள் பாதைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் அவை அதிக செலவுடையவை என்றும், சில இன்னும் கட்டுமான நிலையில் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.































