“60 மற்றும் நன்றியுணர்வுடன்” என்று அவர் பதிவுக்குத் தலைப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து, நடிகையின் தோற்றத்தைப் பாராட்டினர்.
வயதை கொண்டாடும் சல்மா ஹயக்கின் அணுகுமுறை
சல்மா ஹயக் தனது பிறந்தநாளை வித்தியாசமான புகைப்படங்களுடன் கொண்டாடுவது இது முதல் முறையல்ல. 2025ஆம் ஆண்டு, தனது 59வது பிறந்தநாளை முன்னிட்டு சிவப்பு நிற நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார்.
அதே ஆண்டில், Sports Illustrated இதழின் சிறப்பு நீச்சல் உடை வெளியீட்டின் அட்டைப்படத்திலும் அவர் இடம்பெற்றார். 58 வயதில் அந்த இதழில் இடம்பெறுவேன் என்று யாராவது கூறியிருந்தால், அவரை பைத்தியம் என்று நினைத்திருப்பேன் என அப்போது சல்மா ஹயக் தெரிவித்திருந்தார்.
இளமையாகத் தோன்றுவதில் தான் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும், தன்னைப் பராமரித்துக் கொள்வதை விரும்புவதாகவும் அவர் முன்பு கூறியிருந்தார். கணவர் François-Henri Pinault தன்னைப் பார்த்து தொடர்ந்து வியக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். Salma Hayek 60th birthday பதிவு, வயது குறித்த அவரது நேர்மறையான பார்வையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
































