இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர்கள்
குத்துச்சண்டை களம் இடம்பெற்றுள்ள அந்தப் போஸ்டரில், ‘தி ஆரிஜின் ஆஃப் சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது. இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தப் படத்தை கிரிஷ் மாத்ருபூதம், பா.ரஞ்சித் மற்றும் ஆர்யாவின் மனைவி சாவிஷா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Sarpatta Parambarai 2 shooting தொடங்கியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
‘சார்பட்டா பரம்பரை’ முதல் பாகம் 2021ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. வட சென்னையைச் சேர்ந்த இரண்டு குத்துச்சண்டை பரம்பரைகளுக்கு இடையிலான மோதலை மையமாகக் கொண்ட அந்தப் படம், அப்பகுதியின் விளையாட்டு மற்றும் அரசியல் சூழலைப் பதிவு செய்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.






























