அதேபோன்று, மற்ற சாலைப் பயனர்களுக்கு தெளிவாகத் தெரியக்கூடிய ஒளியைப் பிரதிபலிக்கும் பாதுகாப்பு உடை அல்லது சாதனம் இல்லாமல் பயணித்தால் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும்.
இந்தக் கட்டுப்பாடுகள் இரவு நேரத்திற்கு மட்டும் அல்ல. பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும் பொதுச் சாலையில் பயணிக்கும் போது அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
ஏற்கனவே Seine-et-Marne, Alpes-Maritimes மற்றும் Yonne உள்ளிட்ட சில பகுதிகளில் தலைக்கவசம் மற்றும் ஒளியைப் பிரதிபலிக்கும் பாதுகாப்பு சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. Vaucluse பகுதியில் தலைக்கவசம் மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்துவோர் புதிய விதிகளை கவனத்தில் கொண்டு பயணிப்பது அபராதத்தைத் தவிர்ப்பதுடன் சாலைப் பாதுகாப்பையும் அதிகரிக்கும்.



























