டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் SLT-MOBITEL நிறுவனமும் முன்னெடுக்கும் இந்த நிகழ்வு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான நாட்டின் முக்கிய தேசிய தளமாக அமைகிறது. உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள், உருவாக்குநர்கள் மற்றும் இளம் திறமையாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
Sri Lanka AI Week 2026 நிகழ்வுகளின் திட்டம்
நிகழ்ச்சித் தொடரில் AI Hackathon, AI Leaders’ Night, இரண்டு நாள் AI Conference and Exhibition மற்றும் National AI Awards ஆகியவை இடம்பெறும். AI Hackathon செப்டம்பர் 25ஆம் திகதியும், AI Leaders’ Night செப்டம்பர் 28ஆம் திகதியும் நடைபெறும். AI Conference மற்றும் National AI Expo செப்டம்பர் 29, 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. National AI Awards செப்டம்பர் 30ஆம் திகதி இடம்பெறும்.
Roar AI, பல முன்னணி உலகளாவிய AI மாதிரிகளை ஒரே தளத்தின் ஊடாகப் பயன்படுத்தும் வசதியை நிறுவனங்களுக்கும் உருவாக்குநர்களுக்கும் வழங்குகிறது. உள்ளூர் நாணயக் கட்டணம், உள்ளூர் தொழில்நுட்ப ஆதரவு, உள்ளூர் பயன்பாட்டுக்கான கட்டமைப்பு, நிர்வாகக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வரம்புகள் ஆகியவற்றை இந்தத் தளம் வழங்குகிறது.
Roar Global நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Mustafa Kassim கூறுகையில், AI பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கு அணுகலும் விழிப்புணர்வும் மட்டும் போதாது என்றும், நடைமுறை வழிகாட்டுதல் மற்றும் பொறுப்பான உருவாக்கத்துக்கான கட்டமைப்பு தேவை என்றும் தெரிவித்தார். Sri Lanka AI Week 2026 காலத்தில் நிறுவனங்கள், தொழில்நுட்பக் குழுக்கள், தொடக்க நிறுவனர்கள், உருவாக்குநர்கள் மற்றும் மாணவர்களுடன் Roar AI ஈடுபடவுள்ளது.
































