அரச நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பு மேம்படும்
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதுகுறித்து தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் பல அரச ஊழியர்கள் தாங்களாக உருவாக்கிய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை உத்தியோகபூர்வ தொடர்புகளுக்கு பயன்படுத்துகின்றனர் என்றார்.
புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மின்னஞ்சல் வசதி மூலம், அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய தகவல்களை பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்ள முடியும். காணொளி மாநாடுகள் உள்ளிட்ட பணிகளையும் இந்த வசதி எளிதாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்கிடையிலான இணைப்பை மேம்படுத்தி, அரசாங்கத்தின் விரிவான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்துக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும். மின்னஞ்சல் வழியாக உத்தியோகபூர்வ பணிகளை மேற்கொள்ளும் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இந்த Sri Lanka government official email வசதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.




























