செம்மணி மனித புதைகுழி மேலும் 8 என்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழி, தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதன் 44ஆவது நாளான இன்று (05) மேலும் 8 புதிய என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன் முன்னதாக அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 491 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் […]
