இதுவரை முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 491 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 489 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சியவற்றை மீட்கும் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அகழ்வுப் பணிகள் தொடர்பான நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தடயவியல் மற்றும் தொல்லியல் நிபுணர்கள் இணைந்து விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.






























