Tag: Archaeology
செம்மணி மனித புதைகுழி, தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதன் 44ஆவது நாளான இன்று (05) மேலும் 8 புதிய என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன் முன்னதாக அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 491 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் […]
Sarnath UNESCO World Heritage, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாராணசிக்கு அருகில் அமைந்துள்ள பண்டைய புத்த மதப் புனிதத் தலமான சார்நாத் (Sarnath) யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் புசானில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 48வது அமர்வில் இந்த முக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. புத்தர் போத்கயாவில் ஞானம் பெற்ற பின்னர் தனது […]
செம்மணி புதைகுழி யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 41ஆவது நாளாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை உள்ளடக்கிய 95 நாட்கள் அகழாய்வில் மொத்தம் 478 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 464 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய அகழாய்வில் மூன்று என்புக் குவியல்கள் ஆணிகள் மற்றும் சீமெந்து துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டன. இதற்கிடையில் 467ஆவது […]
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் இன்றைய (ஜூலை 19) கட்டத்தில் கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் காணப்பட்ட மனித என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த என்புத் தொகுதி மிகவும் அசாதாரணமான நிலையில் காணப்பட்டதாகவும் அதன் அமைப்பு மற்றும் புதைக்கப்பட்ட விதம் தொடர்பாக சட்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் […]
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளுடன் மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகளில் மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனவும் ஒரு குழந்தையின் எலும்புத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் […]
தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிற்கு தென்மேற்கே அமைந்துள்ள டான் யாய் தாங் கிராமத்தில் உள்ள நெல்வயலில் கிடைத்த தொன்மையான பொருட்களைத் தொடர்ந்து அந்நாட்டு அரசின் தொல்லியல் துறையான Fine Arts Department தீவிர அகழாய்வை முன்னெடுத்தது. வரலாற்றுக்கு முந்தைய இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தத் […]
நாடளாவிய ரீதியில் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 1,000 தளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும் அதனுடன் இணைந்த தொல்பொருள் இருவாரமும் ஜூலை 7 முதல் ஆரம்பமாகவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பாரம்பரியத்திற்கு புத்துயிர்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக நாடு முழுவதும் இனங்காணப்பட்டுள்ள 100 தொல்பொருள் தளங்களில் அகழ்வாராய்ச்சி, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மேலும் தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் […]
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8ஆம் நாளான இன்று (05) குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வின் போது தங்கம் என சந்தேகிக்கப்படும் சிறிய ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆய்வில் மொத்தம் ஐந்து எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டவற்றில் இருந்து ஒரு குழந்தையின் எலும்புக்கூடும் மற்றொரு மனித எலும்புக்கூடும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி […]