வாசிப்பு மற்றும் கணிதத்தில் கடுமையான வீழ்ச்சி
2000ஆம் ஆண்டு வாசிப்புப் புரிதலுக்கான சராசரி மதிப்பெண் 500 ஆக இருந்தது. அது 2012ஆம் ஆண்டு 501 ஆக உயர்ந்த நிலையில், 2022ஆம் ஆண்டு 482 ஆகக் குறைந்தது. அதன்பின் 16 புள்ளிகள் சரிந்து, சமீபத்திய மதிப்பெண் 466 ஆக பதிவாகியுள்ளது.
கணிதத்தில் 2003ஆம் ஆண்டு சராசரி மதிப்பெண் 502 ஆக இருந்தது. 2015ஆம் ஆண்டு அது 496 ஆகக் குறைந்து, 2018ஆம் ஆண்டு 497 ஆக சற்றே உயர்ந்தது. ஆனால் 2022ஆம் ஆண்டு 480 ஆகவும், பின்னர் 469 ஆகவும் வீழ்ச்சி கண்டது. அறிவியல் மதிப்பெண் 2006ஆம் ஆண்டு 503 ஆகவும், 2009ஆம் ஆண்டு 506 ஆகவும் இருந்தது. பின்னர் 2015ஆம் ஆண்டு 497 ஆகவும், 2022ஆம் ஆண்டு 491 ஆகவும் குறைந்து, சமீபத்திய அளவில் 486 ஆக உள்ளது.
இளைஞர்களின் கவனச்சேர்க்கை குறைதலும், திரை நேரம் அதிகரிப்பதும் இந்த வீழ்ச்சிக்கான காரணங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. PISA global education decline குறித்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் எட்வார் ஜெஃப்ரே, அடுத்த ஐந்தாண்டு காலத்தின் முக்கியப் பணியாக நடுநிலைப் பள்ளிக் கல்வி இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.





























