இந்த என்புத் தொகுதி மிகவும் அசாதாரணமான நிலையில் காணப்பட்டதாகவும் அதன் அமைப்பு மற்றும் புதைக்கப்பட்ட விதம் தொடர்பாக சட்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் நடைபெற்று வரும் இந்த அகழ்வுப் பணிகளில் நீதித்துறை அதிகாரிகள் சட்ட வைத்திய நிபுணர்கள் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிபுணர்கள் இணைந்து சான்றுகளை பதிவுசெய்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட என்புத் தொகுதி தொடர்பான வயது பாலினம் மற்றும் அடையாளம் போன்ற விவரங்கள் தடயவியல் மற்றும் மனிதவியல் ஆய்வுகளுக்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் மொத்தம் 91 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 446 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 434 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



























