September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் நாடுகடத்தல் வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை போர்ட்ஸ்மவுத்தில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியது இங்கிலாந்து குடியேற்றச் சட்ட மாற்றங்களை கண்காணிக்க புதிய டாஷ்போர்டு குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் நாடுகடத்தல் வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை போர்ட்ஸ்மவுத்தில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியது இங்கிலாந்து குடியேற்றச் சட்ட மாற்றங்களை கண்காணிக்க புதிய டாஷ்போர்டு குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில்

Tag: Semmani Mass Grave

செம்மணி மனித புதைகுழி அமர்ந்த நிலையில் என்புத் தொகுதி

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் இன்றைய (ஜூலை 19) கட்டத்தில் கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் காணப்பட்ட மனித என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த என்புத் தொகுதி மிகவும் அசாதாரணமான நிலையில் காணப்பட்டதாகவும் அதன் அமைப்பு மற்றும் புதைக்கப்பட்ட விதம் தொடர்பாக சட்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் […]

செம்மணி மனிதப்புதைகுழி பொறுப்புக்கூறல் தோல்வியின் அடையாளம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் உண்மையைக் கண்டறிதல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளதற்கான மிகத் தெளிவான அடையாளமாக யாழ்ப்பாணத்தின் செம்மணி–சித்துபாத்தி மனிதப்புதைகுழி மாறியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது. “செம்மணி மனிதப்புதைகுழி நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் பல ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து உண்மையை அறிய காத்திருக்கும் குடும்பங்களின் சாட்சியங்கள் […]

செம்மணி விவகாரம் சந்திரிகாவிடம் விசாரணை நடத்த கோரிக்கை

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் சோமரத்ன ராஜபக்ச வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டிய அவர் அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அது சந்திரிகாவின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். அந்தக் கடிதத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை […]

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் முன்னேற்றம்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஓரளவு முன்னேற்றகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். இன்று (21) மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் முந்தைய ஆட்சிக்காலங்களில் தாக்குதல் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை என்றும் தற்போதைய விசாரணைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். பேராயர் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை […]

செம்மணி புதைகுழியில் எலும்புக்கூடுகள் 400ஐ கடந்தன

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 30ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) நடைபெற்ற நிலையில் மேலும் 07 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 377 எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அகழாய்வு பணிகளின் மூலம் மேலும் பல […]

செம்மணி மனிதப் புதைகுழியில் 300ஐ கடந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது. 72 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வின் அடிப்படையில் இதுவரை 302 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 298 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இன்று (ஜூன் 7) நடைபெற்ற 72வது நாள் அகழ்வாய்வில் மேலும் எட்டு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு சிறுவர்களுக்குரியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

செம்மணி அகழ்வில் 275ஐ கடந்த என்புக் கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று நடைபெற்ற 15ஆம் நாள் அகழ்வில் மேலும் 5 புதிய என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து 6 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 34 என்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் புதைகுழிக்குள் இரண்டு இடங்களில் என்புக் குவியல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். […]

செம்மணி அகழ்வில் சிறுவர் என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் 13ஆம் நாள் அகழ்வின்போது முக்கியமான புதிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அகழ்வில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருந்த இரு என்புக்கூடுகளும் சிறுவர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் என்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மொத்தமாக 8 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும் மேலும் ஒரு என்புக்குவியல் கண்டறியப்பட்டு அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு […]