அண்மையில் சோமரத்ன ராஜபக்ச வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டிய அவர் அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அது சந்திரிகாவின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்தக் கடிதத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் செம்மணி மனிதப்புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


























