த்ரிஷா கோவை விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்காமல் கடந்து சென்றார்.
காந்திபுரத்தில் திரண்ட ரசிகர்கள்
த்ரிஷா வருவதைத் தொடர்ந்து, கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடையின் முன்பும் த்ரிஷாவைப் பார்ப்பதற்காக மக்கள் அலைமோதியதால் பரபரப்பு நிலவியது.
ரசிகர்கள் மேலும் முன்னேறாமல் போலீஸாரும், த்ரிஷாவின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்களும் தடுத்தனர். கடை திறப்பு விழா முடிந்ததும், காரில் ஏறி நின்ற த்ரிஷா ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார். சிலருக்கு கைகொடுத்தார்.
ரசிகர்கள் மத்தியில் பேச அவர் முயன்றபோது, மைக் வேலை செய்யாததால் பேசவில்லை. பின்னர் சிறிது தூரம் சென்ற Trisha Coimbatore road show மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

































