‘அலபோலலோ’ பாடல் குறித்து பூர்ணா
‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் ‘அலபோலலோ’ பாடலுக்கு பூர்ணா நடனம் ஆடியுள்ளார். மலையாள நடிகையான பூர்ணா, தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘கொடிவீரன்’, ‘சவரக்கத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிறு வயது முதலே நடனமாடி வருவதாகவும், நடனத்தின் மீதான ஆர்வத்தால்தான் சினிமாவுக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது துபாயில் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு, இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் ‘காவாலா’ பாடலுடன் Jailer 2 Alabololo song ஒப்பிடப்படுவது தவிர்க்க முடியாதது என்றாலும், இரு பாடல்களும் வெவ்வேறு பாணியில் அமைந்தவை என்று பூர்ணா குறிப்பிட்டுள்ளார். தனது நடனத்துக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





























