கடல் நீரோட்டத்தில் சிக்கிய இருவர்
ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள கரையோரப் பகுதியில் இருவரும் நீந்திக்கொண்டிருந்தபோது, கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அப்போது அந்தப் பகுதியில் பணியில் இருந்த நான்கு காவல்துறை உயிர்காப்புப் படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
உயிர்காப்பு மிதவைகளுடன் கடலில் சுமார் 200 மீற்றர் தூரம் நீந்திச் சென்ற அவர்கள், இருவரையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த Mirissa beach drowning rescue நடவடிக்கையை காவல்துறை கான்ஸ்டபிள்கள் மயூர (96953), அதிகாரி (101327), குமாரசிங்க (103619) மற்றும் ஹசங்க (106051) மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






























