நயன்தாராவுக்கான 60 அடி கட் அவுட்
தமிழகத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கில், நயன்தாரா மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் தோன்றும் வகையில் இந்தக் கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பதிவில் ரெஜினா, திரைப்படம் வெளியாவதற்கு முன்பு தமிழகத்தில் ஒரு நடிகைக்காக இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படுவது நயன்தாராவுக்கே முதல்முறை எனத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். இது 60 அடி உயர சாதனை என்றும், வெற்றிக்கான மனஉறுதியின் வெளிப்பாடு என்றும் அவர் பாராட்டியுள்ளார். இந்தக் கட் அவுட் தன்னைப் பிரமிக்க வைத்ததாகவும் ரெஜினா குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் தொடர்ச்சியாக ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நயன்தாரா, இந்தப் பாகத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.
Mookuthi Amman 2 60 feet cutout பேசுபொருளாகியுள்ள நிலையில், இப்படம் 2026ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.





























