ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஸீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நஸ்லெனை தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக சூர்யா சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரன் கதாபாத்திரத்தின் அறிமுகம்
45 நொடிகள் கொண்ட அறிமுக வீடியோவில், ஈஸ்வரன் ஒரு சைக்கோ கொலைகாரராகவும், தான் செய்த கொலைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்பவராகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். அவரைத் தேடும் காவல் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். ஈஸ்வரன் முகமற்ற, உணர்ச்சியற்ற, மனிதத்தன்மையற்ற கொடூரன் என சூர்யாவின் கதாபாத்திரம் வீடியோவில் குறிப்பிடுகிறது.
நகைச்சுவை கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்குப் படமாக உருவாகும் ‘சீன்’ படத்தை ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரித்துள்ளனர். வினித் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்ய, சூஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். Naslen Tamil debut in Scene இடம்பெறும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






























