சுற்றறிக்கையைத் திரும்பப்பெற சீமான் வலியுறுத்தல்
காவலர் வீரவணக்க நாளையொட்டி காவல்துறையினர் சீருடையில் அணியும் கொடி நாள் வில்லையில் தமிழ்மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். கடந்த 29.09.2026 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, 04.10.2026 அன்று தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ள வில்லையை அணிய அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழுக்கே காவல்துறையின் சீருடையில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்த சீமான், ஒன்றிய அரசின் முடிவை தமிழ்நாடு அரசு எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு அடிபணிந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil Nadu Police Flag Day Badge-ல் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் வகையில் புதிய வில்லையை வழங்க வேண்டும் என்றும், தற்போதைய சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





























