புயல் Boelo காரணமாக நீடிக்கும் கனமழை
வடக்கு பிரான்ஸை தொடர்ச்சியான புயல்கள் தாக்கி வரும் நிலையில், Boelo எனப் பெயரிடப்பட்ட புதிய புயல் நாட்டின் வடக்குப் பகுதிகளில் கனமழையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்பு Austen புயல் பலத்த காற்றுடன் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
Pas-de-Calais பகுதியில் சனிக்கிழமை நண்பகல் முதல் மழை பெய்து வருவதாகவும், சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலைமை காரணமாக Pas-de-Calais orange alert தொடர்கிறது.
ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு பிரான்ஸில் பலத்த மழையுடன் தென்மேற்கு காற்றும் வீசும். சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரையும், காற்றடிக்கும் நேரங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வரையும் அதிகரிக்கலாம்.
Pas-de-Calais தவிர மேலும் 23 பிரான்ஸ் மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள அபாயத்துக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் சில இடங்களில் மழை குறைந்தாலும், நார்மண்டி முதல் Grand-Est வரையிலான பகுதிகளில் இடையிடையே மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.


































