காயமடைந்த குழந்தைகள் சுமார் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய மற்றும் உனவட்டுன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கொக்கல விபத்து தொடர்பில் இருவர் கைது
இந்தப் பஸ் கொக்கலில் உள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க நினைவு அருங்காட்சியகத்துக்கு சென்றுவிட்டு, கொட்டாவைக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பஸ்ஸில் சுமார் 41 குழந்தைகள், 14 தனியார் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆறு பெற்றோர் பயணம் செய்துள்ளனர்.
Koggala train bus collision தொடர்பாக பஸ்ஸின் 40 வயது சாரதியும் 21 வயது நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

































